“நான் சினிமாவின் குழந்தை’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சியில் கமல் மேலும் பேசியது:
100 ஆண்டுகால சினிமா வரலாற்றில் நான் 50 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறேன். இயக்குநர் பாலசந்தர், நடிகர் சிவாஜிகணேசன் ஆகியோர் எனது குரு ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்தினர். என்னை சினிமாவில் இந்த அளவுக்கு உயர்த்திய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கலை நிகழ்ச்சியில் விஜய், கார்த்தி, ஆர்யா, நாசர், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், விவேக், அம்சவர்தன், விஷால், சந்தானம், லட்சுமி ராய், துளசி, வரலட்சுமி சரத்குமார், காஜல் அகர்வால், மதுமிதா, ரோஜா, தன்ஷிகா, ஓவியா, சங்கீதா ஷெட்டி, விமலாராமன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.