சென்னையில் சர்வதேச திரைப்பட விழாசென்னையில் சர்வதேச திரைப்பட விழா

தமிழ் திரைப்பட அகாடமி மற்றும் செவன்த் சேனல் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் புதன்கிழமை (அக்.2) தொடங்குகிறது.

அக்டோபர் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த 15 படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தியா, ஆஸ்திரியா, அல்ஜீரியா, அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, பெல்ஜியம், லாட்வியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படங்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றன.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் விழா நடைபெறுகிறது.

அங்குள்ள திரையரங்கில், விழாவில் இடம்பெறும் படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றிலிருந்து சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர், சிறந்த நடிகர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

புதன்கிழமை நடைபெறும் துவக்க விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், ரஷிய கலாசார மையத்தின் இயக்குநர் மிக்கேல் கோர்படாவ், மலேசிய நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி மற்றும் செவன்த் சேனல் நிறுவனத்தின் மாணிக்கம் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்

ஆசிரியர்