April 2, 2023 4:23 am

ஒரே பாடலில் 400 உடைகள் மாற்றிய நாயகன், நாயகிஒரே பாடலில் 400 உடைகள் மாற்றிய நாயகன், நாயகி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரணம் படத்தில் பாடல் காட்சி ஒன்றில் மட்டும் நாயகன், நாயகி 400 உடைகளை மாற்றியுள்ளனர்.
விஜயசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘ரணம்’. இதில் ஹர்சன் நாயகனாகவும், பூனம்கவுர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், மலேசியா கே.டி.எஸ்.பாஸ்கரன், முருகேஷ், ராதாசரஸ்வதி, சத்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் நாயகன் ஹர்சனுக்கும், நாயகி பூனம்கவுருக்கும் 400 விதமான உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. “எங்கடா போனே ரோமியோ…என்னடா ஆனே ரோமியோ…” என்ற இந்த பாடலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கியுள்ளனர். ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் – கதாநாயகிக்கு 400 உடைகள் பயன்படுத்தி இருப்பது இதுவே முதன் முறை என்று இப்படத்தின் இயக்குநர் விஜயசேகரன் கூறியுள்ளார்.

தற்போது முதற் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்