காதல் மனைவி சைந்தவியின் எதிர்ப்பை மீறி, ப்ரியா ஆனந்துடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்.காதல் மனைவி சைந்தவியின் எதிர்ப்பை மீறி, ப்ரியா ஆனந்துடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்.

பிரபல இளம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், இசையமைப்பதோடு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பென்சில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இவர் நடிப்பதோடு இசையமைக்கவும் செய்கிறார். இவர் படங்களில் நடிப்பது இவருடைய மனைவி சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். படங்களில் நடித்தால் ஹீரோயின்களுடன் பழக்கம் ஏற்படும் என்பதால் அவர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால் காதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

 

முதலில் தான் நடிக்கும் படத்தில் ஹீரோயின் யாரும் இல்லை என்று மனைவியை சமாதானப்படுத்திய ஜி. வி. பிரகாஷ், தற்போது கதையை சிறிது மாற்றி, ஹீரோயின் கேரக்டரையும் சேர்த்துள்ளாராம். அதுமட்டுமின்றி ஹீரோயினாக பிரியா ஆனந்த்தையும் ஒப்பந்தம் செய்துவிட்டதாக தெரிகிறது. வணக்கம் சென்னை, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த், ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என இயக்குனர் எதிர்பார்க்கிறாராம். சைந்தவியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

ஆசிரியர்