அரண்மணை படத்தில் அழகான பேயாக வரும் ஹன்சிகா!அரண்மணை படத்தில் அழகான பேயாக வரும் ஹன்சிகா!

தற்போது, ‘அரண்மனை’ என்ற படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. இந்த படத்தின் ஹீரோவும், இயக்குனரும், சுந்தர் சி தான். இதில், ஹன்சிகாவுடன், லட்சுமி ராய், ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்கின்றனர். ‘மூன்று ஹீரோயின்களை கொண்ட படத்தில், உங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது’ என, ஹன்சிகாவை கேட்டால், சிரித்துக் கொண்டே மறுக்கிறார். இந்த படம், ‘சந்திரமுகி’ போன்ற, பேய் கதையில் தயாராகிறதாம். இதில், ஹன்சிகாவுக்கு, ஒரு சவாலான வேடமாம். ஒட்டு மொத்த கதையும், தன்னை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம், ஹன்சிகா.

 

இதுவரை காதல் கதைகளில் மட்டுமே நடித்து, பழக்கப்பட்ட ஹன்சிகாவுக்கு, முதல் முறையாக பேய் படத்தில் நடிக்கவுள்ளதால், த்ரில்லாக இருக்கிறதாம். திரைப்படங்களில் பேய் வந்தால், ரசிகர்கள் பயப்படுவார்கள். ஆனால், ஹன்சிகாவை பேயாக பார்த்தால், ரசிகர்கள் பயப்படுவார்களா, விசிலடிப்பார்களா என, தெரியவில்லை. ஆனால், ‘அரண்மனை’ படத்தின் பேய், அழகான பேயாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஆசிரியர்