விஜய் சேதுபதியின் நடிப்புக்கு சமந்தா த்ரிஷா பாராட்டு!விஜய் சேதுபதியின் நடிப்புக்கு சமந்தா த்ரிஷா பாராட்டு!

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் சேதுபதி. ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸக்குத் தயாராக உள்ளன.

 

‘சங்குத்தேவன்’ படத்தை அவர் தயாரிப்பதாகக் கிளம்பிய செய்திகளை மறுத்தவர், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் மட்டுமே தான் எடுத்துத் தரப்போவதாகத் தெரிவித்து உள்ளார்.

 

அத்துடன், தற்போது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால், அவற்றை முடித்த பிறகே நிதானமாக ‘சங்குத்தேவன்’ படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.

தன்னுடைய நடிப்பு நன்றாக இருப்பதாக சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் பாராட்டியிருப்பதாகத் தெரிவித்த விஜய் சேதுபதி, த்ரிஷா, சமந்தா போன்ற நடிகைகளும் பாராட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆசிரியர்