கோச்சடையான் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் தமிழில் அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கான அறிகுறி தென்படவேயில்லை.
ஆனால் இப்போது அவர் கன்னடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
கன்னட இயக்குனர் ருஷி என்பவர் இயக்கும் ‘ஒன்வே’ என்ற படத்தில்தான் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இந்தப்படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதற்கு காரணம் அவரது பால்யகால நண்பரான ராஜ் பகதூர் இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்பதுதான்.
ராஜ்பகதூர் நடிப்பதால் ரஜினியையும் இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்கவைத்து சரித்திரப்பெருமையை தட்டிச்செல்ல முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் ருஷி.
1981ல் வெளியான ‘கர்ஜனா’ தான் ரஜினி கன்னடத்தில் நடித்த கடைசிப்படம். கிட்டத்தட்ட 32 வருட இடைவெளிக்குப்பின் தன் தாய்மொழியில் நடிக்கப்போகிறாராம் சூப்பர் ஸ்டார்.