லட்சுமி மேனன் தனது சம்ளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார்.
‘கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருப்பவர் லட்சுமி மேனன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாண்டிய நாடு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
பொதுவாக, நடிகைகள் ஒரு படம் வெற்றி பெற்றாலே எவ்வளவு சம்பளம் உயர்த்தலாம் என்று யோசிப்பார்கள். ஆனால் லட்சுமி மேனனோ தொடர்ந்து நான்கு வெற்றியை கொடுத்திருக்கிறார். அப்புறம் என்ன அவர் மட்டும் சும்மாவா இருப்பார். தனது சம்பளத்தை 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டாராம் லட்சுமி மேனன்.
அதுமட்டுமின்றி இவரை போட்டி போட்டுக் கொண்டு படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். தற்போது லட்சுமிமேனன், “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக ‘ஜிகர்தண்டா, கவுதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய், விமலுடன் ‘மஞ்சப்பை, விஜய் சேதுபதியுடன் ‘வசந்தகுமரன்’ என பல படங்களில் நடித்து வருகிறார்.