17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா

சுமார் 17 ஆண்டுகள் கழித்து ‘ரோஜா’ மதுபாலா தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’ இயக்குனர் அடுத்து இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘வாயை மூடி பேசவும்’ . இதன் மூலம் மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

இவைதவிர, ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்த நடிகை மதுபாலா தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்தப் படத்தில் அவர், நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலான மதுபாலா சுமார் 17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை. மூணாரில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் வரும் 19ஆம் தேதி முதல் மதுபாலா கலந்துகொள்கிறார்.

 

ஆசிரியர்