சிம்பு ஜோடியானார் நயன்தாரா: உறுதிசெய்தார் பாண்டிராஜ்சிம்பு ஜோடியானார் நயன்தாரா: உறுதிசெய்தார் பாண்டிராஜ்

பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்புவை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், படத்தின் நாயகி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. தற்போது இந்தப் படத்திற்கு நாயகி கிடைத்துவிட்டாராம். அது வேறு யாருமில்லை நயன்தாரா தான். இதை பாண்டிராஜ் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இதில் ‘மயிலா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ‘வல்லவன்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

சிம்புவையும், நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக தெம்பில் இருக்கிறாராம் இயக்குனர். படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன்தான் இசை. ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் – சிம்பு பகுதிகளை இயக்க தயாராகிவிட்டாராம்.

சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால் மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா.

எது எப்படியோ பிரிந்த காதல் ஜோடியை மீண்டும் திரையில் ஜோடியாக்கிய பெருமை பசங்க பட இயக்குனரையே சேரும்.

 

ஆசிரியர்