குவியும் வாய்ப்புகள்: உற்சாகத்தில் ‘ஊதா கலரு ரிப்பன் நடிகைகுவியும் வாய்ப்புகள்: உற்சாகத்தில் ‘ஊதா கலரு ரிப்பன் நடிகை

ஒரே படத்தின் மூலம் ஓஹோ என பிரபலமாகிவிட்டார் ஸ்ரீதிவ்யா.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆந்திர அழகி ஸ்ரீதிவ்யா. அதற்கு முன்பே காட்டுமல்லி, நகர்புறம் என்ற இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். அப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன.

இந்நிலையில் மூன்றாவதாக கமிட்டான படம் ஸ்ரீதிவ்யாவை பிரபலப்படுத்திவிட்டது. அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து, ‘ஊதா கலரு ரிப்பன்’ பாட்டு மூலம் பிரபலமானார். இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன.

சுசீந்திரன் இயக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘பென்சில்’ படத்திலும் ஸ்ரீதிவ்யாதான் ஹீரோயின். இது ஒருபுறம் இருக்க மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்திலும் அதர்வாவிற்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஸ்ரீ திவ்யா.

இப்படத்தை மைக்கேல் ராயப்பனுடன் இயக்குனர் சுசீந்திரனும் சேர்ந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு ”ஈட்டி” என பெயர் வைத்திருக்கிறார்கள். அதிகரித்து வரும் பட வாய்ப்புகளால் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

ஆசிரியர்