நட்புக்காக நடிக்கிறார் சிம்புநட்புக்காக நடிக்கிறார் சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படத்தின் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அப்படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என, தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர். ஆனால், இப்போது அதே தலைப்பில், ஒரு படம் எடுக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழும் பெற்று விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதனால், வேறு நல்ல தலைப்பாக யோசித்து வருகிறார், கவுதம் மேனன்.

இந்த நிலையில், கவுதம் மேனன், அஜித்தை ஹீரோவாக வைத்து இயக்கும் படத்தில், சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக, மற்றொரு புதிய செய்தியும் இப்போது கசிந்துஉள்ளது. அஜித் தான், சிம்புவை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று, தன் விருப்பத்தை தெரிவித்தாராம். இதனால், அஜித்தின் படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்த்து விடும் தீவிர ரசிகரான சிம்பு, மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆசிரியர்