3வது திருமணம் செய்தார் பவன் கல்யாண்3வது திருமணம் செய்தார் பவன் கல்யாண்

நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது திருமணத்தைப் பற்றிய தகவல்கள் தான் தற்போது தெலுக்குப் பட உலகில் ஹாட் மேட்டர்.

ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெஹ்நேவா என்ற ஆஸ்திரேலிய முன்னாள் மாடல் அழகியை 3வது முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

வெறும் வதந்தியாக இருந்த இந்த செய்தி அவரது திருமண பதிவு சான்றிதழ் வெளியானதை தொடர்ந்து உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அன்னா லெஹ்நேவா, பவர்ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து ‘டீன்மார்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

1977ம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை காதலித்து இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார் பவன் கல்யாண். இரண்டு வருடமே அவருடன் வாழ்ந்த பவன், அவரை விவாகரத்து செய்து விட்டு பின்னர் தன்னுடன் சில படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார். ரேணுவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு அவரையும் பிரிந்து விட்டார்.

தற்போது ஆஸ்திரேலிய அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பவனின் இந்த செயல் அவரது ரசிகர்களிடம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப்போகிறது எனபது போகப்போகத்தான் தெரியும்.

ஆசிரியர்