அனிருத்தின் ஆர்வ கோளாறு…!அனிருத்தின் ஆர்வ கோளாறு…!

ஆர்வ கோளாறு என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அப்படியே வைக்காமல் அதனை சுருக்கி ‘ஆக்கோ’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். தீபன் பூபதியும் ரதீஸ் வேலுவும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஷ்யாம் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்து, கேட்டு வியந்த கதை இது. தன்னுடைய பங்களிப்பு ஒரு இசை அமைப்பாளராக மட்டுமே, என்று கூறியதோடு மிக சிறந்த பாடல்களை இசை அமைத்து கொடுத்து இருக்கிறார்.

மூன்று இளைஞர்களின் ஆர்வ கோளாறு காரணமாக ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ‘ஆர்வ கோளாறு’ படத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் ஷ்யாம். ஆக்கோ திரைப்படம் நகைச்சுவை கலந்த அதிரடி திரில்லராக தயாராகிறது.

ஆசிரியர்