இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
சசிகுமார் இப்போதைக்கு பிரம்மண் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சாக்ரட்டீஸ் இயக்கி வருகிறார்.
இதன் பிறகு பாலா இயக்கும் படத்தில் கரகாட்டக்காரராக நடிக்கிறாராம் சசிகுமார். மதுரை பக்கத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கரகாட்ட செட் ஒன்றின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் 2015ல் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை சசிகுமார் இயக்கப் போகிறாராம். இது அவர் இயக்கும் மூன்றாவது படம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
இந்த வருடம் நடிப்பில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவிருப்பதாக சசிகுமார் வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின்றன.