சீனாவிற்கு செல்லும் வடிவேலுசீனாவிற்கு செல்லும் வடிவேலு

வடிவேலு நடிக்கும் “ஜெகஜால புஜபல தெனாலிராமன்” படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் 90 சதவீத படிப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், மீதியுள்ள 10 சதவீத படம் சீனா மற்றும் ஆந்திராவில் எடுக்கப்படவுள்ளதாகவம் படப்பிடிப்பு குழுவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இம்மாத இறுதியில் 7 நாள் படிப்பிடிக்கிற்காக  படப்பிடிப்பு குழு செல்ல விருப்பதாகவுகம் கூறப்படுகிறது.

“ஜெகஜால புஜபல தெனாலிராமன்” படம் ஒரு வராலற்று படமாகும். இதற்காக பிரம்மாண்டமான அரங்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டு படபிடிப்பு நடத்தப்படுகிறது.  இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த பட்டா பட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். “ஜெகஜால புஜபல தெனாலிராமனில்”  வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்