கல்லா கட்டவில்லை ஜில்லா | சோரம் போகவில்லை வீரம்கல்லா கட்டவில்லை ஜில்லா | சோரம் போகவில்லை வீரம்

விஜய் நடித்து வெளியான ஜில்லா படம், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் செலவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டுள்ள மதுரை விநியோகஸ்தர்கள், எதிர்பார்த்த அளவு ஜில்லா படம் கல்லா கட்டவில்லை என தகவல் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகவும், தேவையற்ற காட்சிகளை நீக்கி, படத்தை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததால், ஒரு குழு சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது.

அதே நேரம் அஜீத் நடித்து வெளியாகியுள்ள வீரம் படம் மதுரை பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், அஜீத்தின் முந்தைய ஆரம்பம் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்காவிட்டாலும், விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ரசிகர்களிடையே, “கல்லா கட்டவில்லை ஜில்லா; சோரம் போகவில்லை வீரம்” என்ற குறுஞ்செய்திகள் அதிக அளவில் பரப்பப் பட்டு வருகின்றன

ஆசிரியர்