“விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் “உத்தம வில்லன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் கமல். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதில் 50 வயதைக் கடந்தவராக தனது ஒரிஜினல் வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் தனது நண்பனாக நடிக்க ஹிந்தி நடிகரும், இயக்குநருமான ஆனந்த் மகாதேவனை தேர்வு செய்திருக்கிறார்.
ஏற்கெனவே “விஸ்வரூபம் 2′ படத்திலும் ஆனந்த் மகாதேவன் நடித்திருப்பதால், கமலுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்படத்திலும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக “விஸ்வரூபம் 2′ பட வெளியீட்டு தேதியை அறிவிக்க கமல் முடிவெடுத்துள்ளார். படத்தின் ஆடியோவை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கும் கமல், பிப்ரவரி மாத இறுதி அல்லது ஏப்ரல் 14-ஆம் தேதி “விஸ்வரூபம் 2′ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.