சத்தியராஜ் மீண்டும் ஹீரோ ஆகிறார் சத்தியராஜ் மீண்டும் ஹீரோ ஆகிறார்

80 – 90 களில் பிரபல கதாநாயகனாக இருந்து நண்பன் படத்தில் கல்லூரி பேராசிரியராக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். பின்னர் தலைவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் விஜய், சிவகார்த்திகேயனுடன் அப்பா வேடங்களில் நடித்தார். இந்நிலையில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் பாஹ_பாலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக சத்யராஜ் நடித்துள்ள கலவரமான கலவரம் படம் வெளிவரவிருக்கிறது.

இது பற்றி பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வம் கூறும்போது, சத்யராஜூக்கு என்றைக்கும் மவுசு குறையாது. அவரது கிண்டல் கேலி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இப்படம் ஒரு உண்மை கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. டி.ஆர்.ரவிசந்திரன் தயாரித்திருக்கிறார். மேலும் இப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்றார். மேலும் இது ஓடி வெற்றி பெற்றால் இனி சத்யராஜ் சார் இன்னும் 10 வருடங்களுக்கு ஹீரோதான். அப்பா வேடமெல்லாம் இனியில்லை என்றார்.

ஆசிரியர்