என்னை எப்படி வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோங்க… ஸ்ரீதிவ்யாஎன்னை எப்படி வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோங்க… ஸ்ரீதிவ்யா

காட்டுமல்லி என்ற படத்திற்காகத்தான் ஒப்பந்தம். ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சனையால் பாதியில் நின்றது. அந்த படத்திற்காக ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம் வெறும் நான்கு லட்சம்தான். அதிலும் இரண்டு லட்சம் பாக்கி இருக்கிறதாம்.

தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பயங்கர ஹிட் ஆனதால், ஸ்ரீதிவ்யா பெரிய நடிகையாகிவிட்டார். தற்போது மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்த நேரத்தில் காட்டுமல்லி தயாரிப்பாளர் அந்த படத்தை மீண்டும் தொடர்ந்து எடுக்க இருப்பதாக ஸ்ரீதிவ்யாவிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டு வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு லட்சம் சம்பள பாக்கி இருக்கிறது. மேலும் இன்றைக்கு என்னுடைய ரேட் 40 லட்சம் ஆக மொத்தம் 42 லட்சம் கொடுத்தால் நடித்து தருகிறேன் என்று கறாராக கூறிவிட்டாராம்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் 12 லட்சம் வரை தருவதற்கு ஒப்புக்கொண்டும் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். என்னை எப்படி வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோங்க, சம்பளமே வேண்டாம், வாய்ப்பு கொடுத்தால் போதும் என்று என்னிடம் கெஞ்சிய நடிகை இப்போது ஒரு படம் ஓடியதும், பெரிய ஸ்டார் அளவுக்கு பந்தா பண்ணுது என்று வருத்தத்துடன் திரும்பிச் சென்றாராம்.

 

ஆசிரியர்