இந்திக்கு போகிறது அஜித்தின் வீரம்!இந்திக்கு போகிறது அஜித்தின் வீரம்!

வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாசம், ஆக்ஷன், காதல் என கலந்து கட்டி அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘வீரம்’ படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம்.

இந்தியில் இருந்து தேடி வருகிற வாய்ப்பு என்பதோடு, தான் இயக்கிய படம் என்பதால் அதை இன்னும் பிரமாண்டமாக இயக்கலாம் என்று நினைக்கும் இயக்குனர் சிவா, இந்தியில் வீரத்தை ரீமேக் செய்வது பற்றி இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லையாம்.

இருப்பினும், உடனடியாக அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கயிருந்தவர் அதை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறாராம். அதனால் அடுத்து வீரம் இந்தி ரீமேக்கையே சிவா இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.

தீபாவளி விருந்தாக வந்த அஜித்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்நிலையில் வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்