April 1, 2023 5:46 pm

மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய்..!மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய்..!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

விஜய் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அதன்பிறகு வில்லு படத்தில் நடித்தார். பின்னர் எந்த படத்திலும் அவர் டபுள் ரோலில் நடிக்கவில்லை. இந்நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் மீண்டும் இரண்டு வேடங்களில விஜய் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

துப்பாக்கியை மிஞ்சும் ஆக்ஷன் கதை என்றாலும், விஜய்யின் வழக்கமான காமெடி காட்சிகளும் இப்படத்தில் குறைவில்லாத வகையில் ஸ்கிரிப்ட் உருவாகியிருக்கிறதாம். அதனால் ஒருவர் ஆக்சன், இன்னொருவர் காமெடி என இரண்டுவிதமான கெட்டப்புகளில் விஜய் நடிப்பார் என்கிறார்கள். அதோடு, இப்படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ஆக்சன் ரோலில் நடிக்கும் விஜய் தனது உடம்பை கட்டுமஸ்தாக மாற்றப்போகிறாராம்.

மேலும், தலைவா, ஜில்லா படங்களில் எதிர்பார்த்தபடி பஞ்ச் டயலாக்குகள் கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை என்றொரு மனக்குறையில் இருக்கும் விஜய், வாள் படத்தை ரசிகர்களுக்கு நூறு சதவிகிதம் திருப்தியாக கொடுக்க திட்டமிட்டுள்ளதால், ஆக்சன், ஜனரஞ்சகம் என அமர்க்களப்படுத்த தயாராகிவிட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்