அஜீத்துடன் நடிக்க மறுத்தாரா சிவகார்த்திகேயன்?அஜீத்துடன் நடிக்க மறுத்தாரா சிவகார்த்திகேயன்?

 

அஜீத்துடன் நடிக்க பல நடிகர்கள் தவமாய் தவமிருக்கையில் சிவகார்த்திகேயன் அஜீத்துடன் நடிக்க மறுத்துள்ளாராம். இப்போது அல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னர்,

அஜீத், நயன் தாரா நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம். ஆனால் படப்பிடிப்பு அன்று மிக முக்கிய விஜய்டிவி  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்ததால், ஏகன் இயக்குனரிடம் போன் செய்து தன்னால் அந்த கேரக்டரில் நடிக்க முடியாதது குறித்து தகவல் கூறி மன்னிப்பும் கேட்டாரம். அதன்பின்னர் ஒரு புதுமுகம் அந்த கேரக்டரில் நடித்தார்.

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்று இருந்ததால் அந்த வாய்ப்பை பயன்படுத்துவதுதான் நல்லது என முடிவெடுத்து அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பையே உதறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது அதுகுறித்து கூறும் அவர், இனிமேல் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மிஸ் செய்ய மாட்டேன் என்று உணர்ச்சிப் பிழம்புடன் கூறியுள்ளார்.

ஆசிரியர்