விஜய், அஜித் சம்பளத்தை முறியடிக்கும் சிவகார்த்திகேயன் சம்பளம்விஜய், அஜித் சம்பளத்தை முறியடிக்கும் சிவகார்த்திகேயன் சம்பளம்

 

வருமானத்தைப் பெருக்குவதில் சிவகார்த்திகேயன் காட்டும் கவனம் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சின்ன திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது ரேஞ்சை மாற்றும் சமயம் இது தான் என்று பெரிய பிசினஸ் பிளான் போட்டுள்ளாராம். அது என்னவென்றால் அவர் ”கல்லா” கட்டற திறமையைப் பார்த்து கோடம்பாக்கத்துல பல வருஷமா பணம் சம்பாதிக்க ஆளாப் பறக்கறவங்களையே ஆச்சரியப்பட வச்சிருக்காரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியினால், அவர் நடிக்கும் படங்கள் தற்போது சுமார் 25 கோடிக்கு பிசினஸ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இப்போதைக்கு சிவாவோட சம்பளம் 5 கோடி ரூபாய்னு சொல்றாங்க. போன வருஷத்தோட டாப் கலெக்ஷன் ஹீரோங்கறதால அதுக்கு மேலயும் சம்பளம் கொடுக்க ஆட்கள் ரெடியா இருக்காங்கன்றது தனிக் கதை.

அந்த சம்பளத்தோட இப்ப புதுசா அவர் நடிக்கிற படத்தோட எப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு ஏரியா உரிமையை எனக்கே கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போட ஆரம்பித்திருக்கிறாரம். அதுவும் ஒரு 5 கோடி வரைக்கும் போகும்னு சொல்றாங்க. இவை மட்டுமின்றி, தயாரிப்பு விளம்பர செலவுகள் போக தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் லாபத்தில் பங்கும் கேட்கிறாரம். கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் ஒரு படத்துக்கு 15 கோடிக்கும் குறைவில்லாமல் கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இன்னைய தேதிக்கு விஜய், அஜித்துக்கு அடுத்து அதிகமா சம்பளம் வாங்கறது இவராதான் இருக்கும்னு மீடியேட்டர்கள் சொல்றாங்க..

ஆசிரியர்