விஜய் பொறுப்பேற்ற 5 கோடிவிஜய் பொறுப்பேற்ற 5 கோடி

தலைவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அதன் தயாரிப்பாளர் மற்றும் வாங்கி வெளியிட்டவர்களுக்கு ரூ 5 கோடி வரை நடிகர் விஜய் திருப்பித் தந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் சினிமா கேரியரில் மிகவும் சோதனையாக அமைந்த படம் தலைவா. இந்தப் படம் பெரிய சிக்கலுக்கு நடுவில் வெளியானது. விஜய்யின் அரசியல் திட்டங்களுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறின. படமும் பல படங்களின் கூட்டு அவியலாக இருந்ததா ரசிகர்கள் ரசிக்கவில்லை. இதனால் படம் தோல்வியைத் தழுவியது.

இந்தப் படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீசும் நஷ்டக் கணக்கு காட்டி அதை ஈடு செய்யுமாறு விஜய்யை நெருக்கினார்கள்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பஞ்சாயத்தில் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் வேந்தர் மூவீசுக்கு மொத்தமாக ரூ 5 கோடியை நஷ்ட ஈடாகத் தந்துள்ளார் நடிகர் விஜய்.

இதற்கிடையில் ஜில்லாவும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக தென் மாவட்ட விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து போர்க்கொடி கிளம்பியது. விரைவில் அந்த விவரங்கள்

ஆசிரியர்