நான்கரைக் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த வருட இறுதியில் கேரளாவில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதில் மோகன்லால் இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக, சினிமா பார்ப்பதில் ஆர்வமுடையவராக, பள்ளிப் படிப்பை தாண்டாதவராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமாகவும் அமைந்திருந்ததே படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம்.
இந்தப் படம் இதற்கு முன் மலையாளத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஒட்டுமொத்த படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது. ’திருஷ்யம்’ வெளியாகி 50 நாட்களே ஆன நிலையில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
உலகம் முழுக்க தொடர்ந்து பல நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக் ஓடிய இப்படம் ஓமான் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதம் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்நாட்டில் இதுவரையில் எந்த ஒரு மலையாள படமும் இத்தனை நாட்கள் தொடர்ந்து ஓடியதில்லையாம். ஆனால் அந்தப் பெருமையை திருஷ்யம் முதன் முறையாக பெற்றிருக்கிறது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் மோகன் லால் ஜோடியாக மீனா நடித்திருக்கிறார்.