April 1, 2023 7:10 pm

சூர்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 40 கோடியா?சூர்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 40 கோடியா?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

ஏழாம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்தது தோல்வியால் ஆட்டம் கண்ட சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கிவிட்டது ”சிங்கம்-2” . கடைசியாக வந்த டாப் ஹீரோக்கள் படங்களில் கனிசமான லாபத்தைப் பார்த்ததில் இப்படம் முக்கியமானது. அதன் பிறகு தற்போது சூர்யா லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஃபர்ஸ் லுக் போஸ்டர்கள் டெம்பரை ஏற்றத் தொடங்கியிருக்கிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 18 கோடி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் சூர்யா கேட்டிருக்கிறார். தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். தெலுங்கு ரைட்ஸ் குறைஞ்சது 20 கோடியாவது போகும். அப்படியென்றால் சூர்யாவில் சம்பளம் 40 கோடியா? என்று முணுமுணுக்கிறார்கள் கோலிவுட்டில்…

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்