விஜய்-த்ரிஷா நடித்த குருவி படத்தில் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தவர் உதயநிதி. அதையடுத்து, தொடர்ச்சியாக படங்கள் தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வந்த அவர், தான் சூர்யாவைக்கொண்டு தயாரித்த இரண்டாவது படமான ஆதவனில் நயன்தாராவை ஒப்பந்தம செய்தார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் தயாரித்த சில படங்களிலும் நடிக்க அவரை அணுகியவர், தான் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் அவரைத்தான் நடிக்கக்கேட்டார்.
ஆனால், அப்போதெல்லாம் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் சந்தோசத்தில் இருந்து வந்ததால், எந்த படவாய்ப்பையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார் நயன்தாரா. இருப்பினும் தனது இரண்டாவது படமான இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவை மீண்டும் இழுத்து விட்டார் உதயநிதி. இப்படத்தில் அவர்களது ஜோடி பொருத்தம் ஒர்க் அவுட்டாகியிருப்பதால், அடுத்து மீண்டும் தான் நடிக்கும் நண்பேன்டா படத்திலும் நயன்தாராவையே முன்பதிவு செய்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நயன்தாரா ரொம்ப நல்ல நடிகை. அதனால்தான் எனது படங்களில் அவர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் மாதிரியான ஆர்ட்டிஸ்டுகள்தான் வளர்ந்து வரும் என்போன்றோருக்கு பேலன்சாக இருக்கிறார்கள்.
அதனால்தான் எனது முதல் படத்திற்கே அவரை அணுகினேன் ஆனால் அவர் அப்போது நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்ததால் ஹன்சிகாவை நாடினோம். ஆனால், இப்போது அவர் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பதால் இனி எனது எல்லா படங்களிலுமே அவரை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறேன்.
ஒருவேளை அவர் பிசியாக இருந்தாலோ அல்லது கதைக்கு பொருத்தமில்லாமல் இருந்தாலோ மட்டும்தான் வேறு கதாநாயகிகளை நாடுவேன். இலலையேல் அவருக்கே எனது படங்களில் முதலிடம் கொடுப்பேன் என்கிறார் உதயநிதி.