பணம் வாங்கிகொண்டு நடிக்கும் கமலுக்கு பத்மபூஷண் எதற்கு? தங்கர் பச்சான்பணம் வாங்கிகொண்டு நடிக்கும் கமலுக்கு பத்மபூஷண் எதற்கு? தங்கர் பச்சான்

 தனது அதிரடி பேச்சால் கோடம்பாகத்தை அதிரவைத்து வருபவர் தங்கர் பச்சான். தற்போது நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கொடுக்கப்பட்டதை விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசு கமலுககு பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த விருதை இன்னும் சில தினங்களில் தில்லி சென்று வாங்கவிருக்கிறார் கமலஹாசன். இந்த நிலையில் தான் கமலுக்கு இந்த விருதை கொடுத்ததை விமர்சித்துள்ளார்.

கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அவர் பணம் வாங்கிட்டுதான் நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட வலம்வரலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே? என்று தங்கர் பச்சான் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும் என்று கூறியுள்ளார் தங்கர் பச்சான்.

ஆசிரியர்