April 2, 2023 4:32 am

இந்தியன் – 2 | எந்திரன் – 2இந்தியன் – 2 | எந்திரன் – 2

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

சிங்கம்-2 , பீட்சா-2 படங்களைத் தொடர்ந்து விஸ்வஷரூபம் -2, ஜெய்ஹிந்த்- 2 உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில, இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கும் இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை மேலோங்கியிருக்கிறதாம். அதனால், 1996ல் கமலை இரண்டு வேடங்களில் இயக்கிய இந்தியன் படத்தையும், 2010ல் ரஜினியை இயக்கிய எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது விக்ரம் நடிப்பில் ஐ படத்தை இயக்கி முடித்து விட்ட ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியை வைத்து எந்திரன்-2 வை முதலில் தொடங்குகிறாராம்.

அதையடுத்து, கமலை வைத்து இந்தியன்- 2வை இயக்குகிறாராம். தற்போது விஸ்வஷரூபம்- 2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த இரண்டு படங்களுமே இதுவரை எந்த தமிழ் படங்களும் உருவாகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிறதாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்