April 2, 2023 4:15 am

திருட்டு வி.சி.டி உடன் லட்சுமிமேனன்திருட்டு வி.சி.டி உடன் லட்சுமிமேனன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பெரும்பாலான நடிகைகள் சினிமாத்துறைக்குள் வரும்போதுதான் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், லட்சுமிமேனன் அப்படியல்ல, கும்கி படத்தில் நடித்தபோது எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதில் துளியும் குறையாமல் இருக்கிறார்.

Untitled1
எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கிறார். தன்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன்காரணமாக, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து நடித்து விட்டு கேரவனுக்குள் செல்பவர், இந்திய அளவில் வெளியான நல்ல படங்களை டிவிடியில் போட்டுப்பார்க்கிறாராம். மற்ற நடிகர்-நடிகைகள் எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து அதில் நல்லதை தனது நடிப்புக்கும் பயன்படுத்திக்கொள்கிறாராம்.
அதேபோல்தான், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படத்தில் நடித்து வந்தபோதும்இ திடீர் திடீரென்று கேரவனுக்குள் ஓட்டம் பிடிக்கும் லட்சுமிமேனன். டிவிடியில் படம் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதோடு, ஏராளமான படங்களின் சிடிக்களையும் ஒரு சூட்கேசில் வைத்திருந்தாராம். அத்தனையும் திருட்டு விசிடிக்களாம். இதை ஜிகர்தண்டா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியின்போது கிண்டலாக சித்தார்த் சொல்லப்போக, அங்கு வந்திருக்கும் சினிமா பிரபலங்கள் தன் மீது பாய்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் லட்சுமிமேனன்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்