நான்காவது முறையாக இணையும் கமல்-ஜெயராம்!நான்காவது முறையாக இணையும் கமல்-ஜெயராம்!

விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’.

கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது இந்த கூட்டணியில் ஜெயராமும் இணைந்திருக்கிறார்.

ஜெயராம் ஏற்கனவே கமலுடன் இணைந்து தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவை தவிர 1989ல் கமல் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘சாணக்யன்’ என்ற படத்திலும் ஜெயராம் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘உத்தம வில்லன்’ இருவரும் இணையும் நான்வது படம்.

இதில் ஜெயராமுக்கு முக்கிய கேரக்டரை கொடுத்திருக்கிறாராம் ரமேஷ் அரவிந்த். இந்த தகவலையும் அவரே உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ‘கோச்சடையான்’ ஆடியோ விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ‘உத்தம வில்லன்’ படத்தின் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன்.

ஆசிரியர்