April 1, 2023 6:10 pm

லிப் லாக் போட தயங்கிய நடிகர்லிப் லாக் போட தயங்கிய நடிகர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொதுவாக ஒரு படம் என்றால் அதில் நாயகி தான் நாயகனுக்கு முத்தம் கொடுக்க வெட்கப்படுவார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு கதாநாயகன் படத்தின் கதாநாயகிக்கு முத்தம் கொடுக்க வெட்கப்பட்ட சமாச்சாரம் பாலிவுட்டில் நடந்துள்ளது.

ஸ்டூடண்ட்ஸ் ஆப் தி இயர் என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானவர் வருண் தவான். அவர் அடுத்தாக நடித்து வரும் படம் மெயின் தேரா ஹீரோ. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை இலியானா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபலம் அடைந்த ஒரு நாயகி இலியானா. அவரிடம் வருணுக்கு நீங்க லிப் டூ லிப் கிஸ் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் ஒரு புதுமுக நடிகருக்கு முத்தம் கொடுப்பதா? என்று முதலில் தயங்கியிருக்கிறார், ஆனால் படத்தில் இலியானாவின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்ததால் அதற்கு ஓ.கே சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்திற்காக அந்த லிப் லாக் காட்சி மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இலியானாவுக்கு எப்படி தயக்கம் இருந்ததோ அதேபோல நாயகன் வருணுக்கும் ஒரு பிரபல நடிகையுடன் எப்படி லிப் லாக் காட்சியில் நடிப்பது என்று தயக்கம் இருந்ததாம்.

அந்த கூச்ச சுபாவத்தோடு நடித்ததால் முத்தக்காட்சி சரியாக வரவில்லை. இதனால் டென்ஷனான இயக்குனர், வருணின் தயக்கத்துக்கான காரணத்தைக் கேட்டதும் எதுவும்,பேசாமல் தனது டீமை கூட்டிக் கொண்டு ஸ்பாட்டை விட்டு வெளியில் போய் விட்டாராம்.

அதன் பிறகு ஒளிப்பதிவாளர் மட்டும் இருந்து வருண்- இலியானா லிப் லாக் சீனை எந்த டென்ஷனும் இல்லாமல் எடுத்து முடித்தாராம்.

main-tera-hero2-300x230

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்