April 2, 2023 3:23 am

தமன்னாவுக்கு ஏன் இந்தக் கதிதமன்னாவுக்கு ஏன் இந்தக் கதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை, நடிகர் – நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் தென்னிந்தியாவில் அப்படியல்ல, படப்பிடிப்பு முடிந்ததும் எங்களுக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடிகைகள் எஸ்கேப்பாகிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், அஜீத் – தமன்னா நடிப்பில் தமிழில் வெளியான வீரம் படம் தற்போது தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரில் டப்பிங்காகி வெளியாகி உள்ளது.

ஆனால், முன்னதாக இந்த படத்தின் புரமோஷனுக்கு தமன்னாவை அழைத்தார்களாம். அப்போது 15 லட்சம் கொடுத்தால்தான் வருவேன் என்று உறுதியாக சொல்லி விட்டாராம்.

images

இதனால் அப்படத்தை வெளியிட்ட படாதிபதி, அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து விட்டாராம். அதையடுத்து, இனி தமன்னாவை எந்த படத்திற்கும் புக் பண்ணக்கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமன்னா, மேற்படி தயாரிப்பாள் சந்தித்து மன்னிப்பு கோரினாராம். அதோடு, இனி என் சம்பந்தப்பட்ட படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவேன் என்றும் ஒப்புதல் அளித்தாராம். அதையடுத்து, தமன்னா மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்