ஒரு கோடி நிகழ்ச்சிக்கு மூன்று கோடி சம்பளம்.ஒரு கோடி நிகழ்ச்சிக்கு மூன்று கோடி சம்பளம்.

தமிழ் தொலைக்காட்சிகளில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி போன்று தெலுங்கிலும் ஒரு கோடி ரூபாய் நிகழ்ச்சி ஒன்றை தெலுங்கு முன்னணி சேனல் ஒன்று தயாரித்து வருகிறது. இதில் முதன்முதலாக சின்னத்திரையில் தோன்றி நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் நாகார்ஜுனன்.

40 வாரங்கள் ஒளிபரப்பாகும் இந்த தொடர் நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாகார்ஜுனா ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த தொகையை எவ்வித மறுப்பும் இன்றி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது அந்த முன்னணி சேனல்.

இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி விரைவில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் வரவுள்ளது.

ஆசிரியர்