திரிஷா இல்லேன்னா நயன்தாராதிரிஷா இல்லேன்னா நயன்தாரா

த‌ற்போது பென்சில் படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் உதவியாளர் ஆதிக் இயக்குகிறார். ரிபெல் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரொமாண்டிக் காமெடி படம்.

திரிஷா அல்லது நயன்தாரா மாதிரி பெண் வேண்டும் என்று அலையும் இளைஞனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் தான் படத்தின் கதை. பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு த்ரிஷா ஓகே சொல்லிவிட்டார். நயன்தாரா தரப்பிலிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

தலைப்பை வெளியே சொல்வதற்கு முன் நயன்தாராவிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். முன்பே அறிவித்து விட்டு இப்போது கேட்டால் எப்படி?. மேலும் நயன்தாராவின் பெயரை வைத்தே படத்தின் பிசினசை செய்து விட முடியும். நயன்தாராவிற்கு கோடிக் கணக்கில் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கும் தயாரிப்பாளர்கள் இதனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

தன் பெயர் அனாவசியமாக பயன்படுத்தப்படுவதை அவர் விரும்ப மாட்டார் என்று நயன்தாரா தரப்பு கூறுகிறது. இருந்தாலும் நயன்தாராவுக்கு நெருக்கமானவர்களை கொண்டு அவரது சம்மதத்தை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.

nayan_trisha01

ஆசிரியர்