பிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மீண்டும் இணையும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படம் சரித்திர கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.
ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் முதன்முதலாக சரித்திரக்கதை பின்னணியில் நடிக்க உள்ளதால் இருவருக்குமே பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றதாம். ஆனாலும் இந்த படம் முழுவதும் சரித்திர பின்னணி உள்ள படம் இல்லை என்றும் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகள் மட்டுமே சரித்திரப்பின்னணி கொண்டவை என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு இளவரசி வேடமாம். இந்த படத்திற்கு தேவையான காஸ்டியூமை உடை வடிவமைப்பாளருடன் ஹன்சிகாவே நேரில் சென்று செலக்ட் செய்கின்றாராம்.
சிறுவயதில் சரித்திரக் கதைகளை படிப்பதிலும், சரித்திர படங்களை பார்ப்பதிலும் தனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், சினிமாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஒரு படத்திலாவது இளவரசியாக நடிக்கவேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்றும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை லக்ஷ்மண் என்ற இயக்குனர் இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.