April 1, 2023 5:51 pm

ஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நயந்தாராஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நயந்தாரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தன்னுடன் டூயட் பாட நினைக்கும் இளவட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நயன்தாரா, அடுத்து வளரவிருக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று அடித்து சொல்லியிருக்கிறார்.

அவரது இந்த நிராகரிப்பு மேற்படி பட நாயகன் ஆர்யாவுக்கு இடி விழுந்தது போல் ஆகிவிட்டதாம்.

இருப்பினும், நயன்தாரா இல்லாமல் ஒரு பாஸ் என்ற பாஸ்கரனா? அதை நினைத்துப் பார்க்கவே வெறுப்பாக உள்ளது. நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இன்றைக்கும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களையும் எனது நினைவுகளில் பசுமையாக வைத்திருக்கிறேன்.

அந்த அளவுக்கு அவருடன் நடிக்கிறபோது ஒரு இனம் புரியாத ரொமான்டிக்கான பர்பாமென்ஸ் வெளிப்படும். அதனால்தான் அவருடன் மீண்டும் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் மிகுதியாக இருக்கிறேன் என்று தனது பீலிங்ஸை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்யா.

ஆனாலும் நயன்தாரா இறங்கி வந்தபாடில்லை. ஆர்யாவை விட்டு விலகிய பிறகுதான் நானே எதிர்பார்க்காத சிம்பு படவாய்ப்பெல்லாம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அதனால், எனது மார்க்கெட்டை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஆர்யாவை விட்டு விலகியிருப்பதுதான் எனக்கு நல்லது என்று சொல்லிக்கொண்டு, தொடர்ந்து ஆர்யாவின் விருப்பத்துக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார் நயன்தாரா.

arynayan20613_m

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்