இளையதளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுடன் நடிகை சமந்தா தற்போது நடித்து வருகிறார். விஜய்யுடன் கத்தி மற்றும் சூர்யாவுடன் அஞ்சான் படங்களில் படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வதற்காக சமந்தா ஐதராபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கு மாறி மாறி பறந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கத்தி படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சமந்தா அதற்கு முந்தைய நாள் மும்பையில் சூர்யாவுடன் இரவு முழுவதும் நடித்ததால் ‘கத்தி’ படப்பிடிப்பிற்கு வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டதாம். 9 மணிக்கு தொடங்க வேண்டிய படப்பிடிப்பிற்கு சமந்தா 12 மணிக்குதான் வந்தாராம். அதுவரை விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சமந்தாவிற்காக காத்திருந்தனர்.
சமந்தா வந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டாமல் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் அன்றைய காட்சிகள் முழுவதையும் உச்சி வெயிலில் இருக்கும்படி படப்பிடிப்பு நடத்தினார். சமந்தாவிற்கு ஏற்கனவே தோல் வியாதி என்பதால் அதிக வெப்பமான இடத்தில் நிற்கக்கூடாது என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் அது தெரிந்தும் ஏ.ஆர்.முருகதாஸ் வேண்டுமென்றே சமந்தாவை மிகக்குறைந்த ஆடைகளுடன் உச்சி வெயிலில் நிற்கவைத்து நீண்ட நேரம் படப்பிடிப்பு நடத்தினார். இதனால் சமந்தா செய்வதறியாது அதிர்ச்சியுடன் திகைத்து நின்றதாக கூறப்படுகிறது.