வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் தென்னாலிராமன்வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் தென்னாலிராமன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால், திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்ட வடிவேலு, சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம் – தெனாலிராமன். இந்தப்படத்தின் கதைப்படி வடிவேலுவுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். 53 வது வாரிசு பிறக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்தான் தெனாலிராமன் படத்தின் கதை.

தெனாலிராமன் என்ற டைட்டில் ரோலில் மட்டுமின்றி மதியூகியான மற்றொரு கேரக்டரிலும் நடித்திருக்கிறார் வடிவேலு. தெனாலிராமன் படத்தில் தன் வழக்கமான பாணியில் காமெடி வசனங்களில் பிச்சு உதறி இருக்கும் வடிவேலுஇ நாசூக்காக ஒரு வசனத்தையும் படத்தில் வைத்திருக்கிறார்.

அதாவது கடந்த 3 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தமைக்கான காரணத்தை ரசிகர்களுக்குச் சொல்வதுபோல் அந்த வசனம் அமைந்திருக்கிறது.
ஒருவனின் லட்சியம் நிறைவேறும்வரை மறைவாக இருப்பதுதான் நல்லது. இது உலகின் அனைத்துப்போராளிகளுக்கும் பொருந்தும். என்பதே அந்த வசனம்.

6_1395058744

ஆசிரியர்