April 1, 2023 5:30 pm

மனோரமா ஆச்சிக்கு திடீர் மூச்சுத்திணறல். மனோரமா ஆச்சிக்கு திடீர் மூச்சுத்திணறல்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1000 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை புரிந்த பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று இரவு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற போராடி வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

சில மாதங்களுக்கு முன் மூச்சுதிணறலால் கஷ்டப்பட்ட நடிகை மனோரமா, பின்னர் குணமாகி வீடு திரும்பினார். தற்போது மீண்டும் நேற்று இரவு மூச்சுத்திணறல் வந்துள்ளது. மனோரமாவை மருத்துவமனையில் கோலிவுட் பிரபலங்கள் பார்த்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர். மனோரமா விரைவில் குணமாக அவர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

cb39a92f-4383-4f6d-beab-c7b87f20e30dOtherImage

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்