நான் சிகப்பு மனிதனுக்கு யூ சான்றிதழ் கிடைக்குமா!!நான் சிகப்பு மனிதனுக்கு யூ சான்றிதழ் கிடைக்குமா!!

விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் விஷால் – லட்சுமி மேனனின் முத்தக்காட்சியை நீக்கவேண்டும் என்றும், இல்லையெனில் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.

Vishal-Lakshmi-Menon-Lip-Kiss

விஷால்-லட்சுமி மேனனின் முத்தக்காட்சி படத்தின் ஹைலைட்டாக விளம்பரப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் அந்த காட்சியை நீக்கினால் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு ஆளாக வேண்டும் என்றும் இயக்குனர் திரு மற்றும் விஷால் எண்ணுகின்றனர். அதே நேரத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் ரூ.22 கோடி செலவில் தயாராகியுள்ளது. யூ சான்றிதழ் கிடைக்காவிட்டால் அரசிடம் இருந்து கிடைக்கும் 30% வரிச்சலுகை கிடைக்காமல் போய்விடும். இதனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.7 கோடி வரை நஷ்டம் உண்டாகும். இதனால் முத்தக்காட்சியை நீக்கிவிடலாமா? என்பது குறித்து இயக்குனர் திருவுடன் தயாரிப்பாளர்கள் விஷால் மற்றும் லிங்குசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.

ஆசிரியர்