ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த பூலோகம் படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் என்ற நடிகர் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் மோதும் பாக்ஸராக இவர் நடித்துள்ள காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் வில்லன் நடிகர் நாதன் ஜோன்ஸுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப்பணம் இன்னும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொடுக்கவில்லை என தெரிகிறது. நாதன் ஜோன்ஸ் பலமுறை தன் உதவியாளர் மூலம் கேட்டும் பணத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் செட்டில் செய்யாததால், அவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பட ரிலீஸுக்கு முன்பு கண்டிப்பாக அவருடைய சம்பளம் கொடுக்கப்பட்டுவிடும் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து உறுதி கூறப்பட்டுள்ளது.
நாதன் ஜோன்ஸ் வழக்கு தொடர்ந்தால், “பூலோகம்” வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கபட்டு வருகிறது.