அஜீத்தின் படத்தை இயக்கவிருப்பதால் சிம்பு படத்தை வேகமாக முடித்துக்கொண்டிருக்கும் கெளதம்அஜீத்தின் படத்தை இயக்கவிருப்பதால் சிம்பு படத்தை வேகமாக முடித்துக்கொண்டிருக்கும் கெளதம்

சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக வெளியான படம் போடா போடி. 2012ல் இப்படம் வெளியானது. அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்த காலகட்டத்தில் வேட்டைமன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் நடித்துக்கொண்டும் வந்தார். ஆனால் இன்னமும் படங்கள் திரைக்கு வரவில்லை. இதற்கிடையே தனது சொந்த தயாரிப்பில், ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வரும் சிம்பு, கெளதம்மேனன், செல்வராகவன் இயக்கும் படங்களில் தற்போது சீரியசாக நடித்துககொண்டிருக்கிறார்.

இதில், கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் சட்டென்று மாறுது வானிலை படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தபடியாக அஜீத் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதால் சிம்பு படத்தை வேகமாக முடித்துக்கொண்டிருக்கிறார் கெளதம். அதனால் தனது சொந்த தயாரிப்பான இது நம்ம ஆளு படப்பிடிப்பைகூட தள்ளி வைத்து விட்டு கெளதம் படத்திற்கு அதிக கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருககிறார் சிம்பு.

அதேபோல், செல்வராகவன் இயக்கும் படத்திலும் அடுத்து நடிக்கப்போகிறார் சிம்பு. இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா நடித்தது போன்று சிம்புவை ஒரு மார்க்கமாக மாற்றப்போகிறாராம் செல்வராகவன். அதனால்இ அந்த படத்தில் நடிக்கும்போது வேறு படத்தில் நடிக்க முடியாது என்பதால், முன்னதாக சட்டென்று மாறுது வானிலை, இது நம்ம ஆளு படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கப்போகிறாராம் சிம்பு.

Gautham-Menon-fails-to-grab-the-title-Sattendru-Maaruthu-Vaanilai

ஆசிரியர்