பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல் வி.போட்லூரி மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் சுனில் நடித்து ஹிட்டடித்த ‘மரியாதை ராமண்ணா’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தானம் நடனம், சண்டை, காதல் என அனைத்து ஏரியாவிலும் வெளுத்துக்கட்டப் போகும் இந்தப் படத்தில் டாக்டர் கேரக்டரில் மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். கதைப்படி, மிர்ச்சி செந்தில் ஹீரோயின் ஆஷ்னா சாவேரியின் முறை மாப்பிள்ளையாக வருகிறாராம்.
0