நாயகன், துப்பாக்கி வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”நாயகன், துப்பாக்கி வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”

சென்னை திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட் மாணவரான கௌதம் வெங்கடேஸ்வரன், ‘மும்பையில் ஒரு காதல்’ படத்தை இயக்குகிறார்.

சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன் குமார் இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். ஜென்சி மீனு நாயகியாக நடிக்கிறார். இவர், தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படம் குல்மொஹர் படத்தில் நடித்திருக்கிறார். நாயகன், துப்பாக்கி, போன்று ‘மும்பையில் ஒரு காதல்’ திரைப்படமும் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். படத்தின் பெரும்பகுதி மும்பையிலும், ஒரு சில பகுதிகள் லண்டன், நியூயார்க் மற்றும் சென்னையிலும் படமாகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர்களாக ஸ்மிரிதி.ஜி, விஜய்.வி, ராஜ்குமார் பணியாற்றுகின்றனர்.

இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வெங்கடேஸ்வரனும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு கமல்.ஜி. பாடல்கள், முருகன் மந்திரம். டாக்கிங் க்ரோஸ் பிலிம்ஸ், மற்றும் வெங்கி பிக்சர்ஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. கலர்ஃபுல்லான அதே சமயம் வித்தியாசமான காதல் திரைப்படமாக வளர்ந்து வருகிறது “மும்பையில் ஒரு காதல்”.

ஆசிரியர்