இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் நிவீக்கா.
பெங்களூரைச் சேர்ந்த இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக வருவாரே அவர்தான். இப்போது நிவீக்கா வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதால் தமிழ்ப் படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் தலைப்பு ‘முருகாற்றுப்படை’. படத்தின் தலைப்புதான் பக்தி மயமானதே தவிர, படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இதில் நாயகனாக சரவணன் என்ற புதுமுகம் அறிமுகமாயிருக்கிறார். இப்படத்திற்காக அவர் ஒரு வருட காலம் கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு ஜோடியாகதான் நவீக்கா நடிக்கிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், ரமேஷ்கண்ணா, தேவதர்ஷிணி, தருண் மாஸ்டர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். கே.முருகானந்தம் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் பாலாவிடம் ‘சேது’ படத்திலும் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜே.ஜே’., ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ போன்ற வெற்றிப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தவர். முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக