மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வியாழக்கிழமை (ஏப்.24) இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியது: மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.24) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களும், திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களும் ஓட்டுப் போடுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய நேர காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஒப்புதலோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.