இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம். இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. அப்படிப்பட்ட என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இருப்பது ஆச்சர்யப்படுகிற விஷயம் இல்லை. என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
0
தன் அடுத்தப் படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் சூட்டி இருப்பதன் மூலம், சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. கோச்சடையான் படத்தில் நடிக்கவே விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் நடித்தேன், நடிப்பிலிருந்து ரிடையர்ட் ஆக விரும்புகிறேன் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருகிறார் ரஜினி. அவர் இதே மனநிலையில் இருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார். எனவே இப்போதே ரஜினி ரசிகர்களை டார்கெட் வைத்தால் பிற்காலத்தில் மொத்த பேரும் தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதுதான் சிவகார்த்திகேயன் போட்டு வைத்திருக்கும் கணக்காம்.