விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு?விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீப்பின் சம்பளம் எவ்வளவு?

விஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக கன்னட ஹீரோ சுதீப்புக்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

விஜய் கத்தி படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது ஸ்ருதி ஹாஸனை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இடையே பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமானதாக வேறு செய்திகள் வந்தன. ஆனால் இப்போதைக்கு ஸ்ருதி ஹான் நாயகி போட்டியில் முதல் இடத்தில் உள்ளார். எனவே, அவர் நாயகியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மேலும் படத்தில் கன்னட முன்னணி ஹீரோவான சுதீப் சிம்புதேவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் விஜய் கதாபாத்திரம் போன்று முக்கியத்துவம் உள்ளதாம். சுதீப் நான் ஈ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புதேவன் படத்தில் நடிக்க சுதீப்பின் சம்பளம் ரூ. 6 கோடியாம்.

கன்னட படங்களின் மொத்த பட்ஜெட்டே சில கோடிகளைத் தாண்டாது. நடிகர், நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கு மாதிரி பெரிய சம்பளம் எல்லாம் தரப்படுவதில்லை. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கன்னட நடிகர் என்ற பெருமையை சுதீப் பெற்றுள்ளார். அதோடு படத்தில் மயிலு ஸ்ரீதேவியும் நடிக்கவிருக்கிறார். சிம்புதேவன் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு விஜய் 58 என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆசிரியர்